Thursday, April 14, 2011

மருந்தீஸ்வரர்!

திருவான்மியூர் : திருவான்மியூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனாய மருந்தீசுவரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, சிறப்பு பூஜைகளுடன் நாளை (செவ்வாய் கிழமை) துவங்குகிறது.திருவான்மியூரில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் உடனாய மருந்தீசுவரர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா மார்ச் 8ம் தேதி, செவ்வாய் கிழமை துவங்குகிறது.ஊர் எல்லை காவல் தெய்வமான செல்லியம்மன் மற்றும் விநாயகர் சுவாமிகளின் வீதி உலா முதல் இரண்டு நாட்கள் நடைபெறும். பின்னர், 10ம் தேதி, தியாகராஜ சுவாமியின் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் துவங்கும் இந்த விழாவில், தியாகராஜ சுவாமிகள், திருபவனி பார்த்தசாரதிக்கு அருளல், சந்திரனுக்கு அருளல், ராமபிரானுக்கு அருளல், இந்திரனுக்கு அருளல் போன்றவைகள் நடைபெறவுள்ளன. கோவில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், "இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் தியாகராஜ சுவாமிகள் திருத்தேரில் மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.இந்த விழா இம்மாதம் 20ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் நிறைவடைகிறது. சுவாமி வீதி உலாவின் போது ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெரும். விழா நாட்களில், திருக்கோவிலின் திறந்தவெளி கலையரங்கில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை, நாட்டியம் போன்றவைகள் நடைபெறும்' என்றார்.

2 comments:

  1. படங்களுடன கருத்துக்களை பகிந்து கொள்ளுங்கள். பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

    ReplyDelete